உலகம் முழுவதும் மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என்று ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை 2023 ஆம் ஆண்டில் பின்னுக்கு தள்ளு இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று ஐநா கணித்துள்ளது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சம் ஆக உள்ளது. சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக உள்ளது.சிசு மரணம் மற்றும் குழந்தை இறப்பு விகிதமும் குறைந்துள்ளது என்று ஐநா நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Categories