உலக முதியோர் தினம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி உலக முதியோர் தினத்தை முன்னிட்டு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 80 வயதிற்கும் மேற்பட்ட வாக்காளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 80 வயதிற்கும் அதிகமான வாக்காளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இவர்களுக்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி பொன்னாடை போர்த்தனார். மேலும் தேர்தல் ஆணையர் ராஜ்குமார் பாராட்டு கடிதத்தை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி தாசில்தார் சுசீலா, துணை தாசில்தார் சங்கரநாராயணன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.