Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் சுற்றுலா பயணிகள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை ஊருக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் எதிரே காட்டெருமை உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இதனை அடுத்து காட்டெருமை சாலையில் உலா வந்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சுமார் 1 1/2 மணி நேரம் அங்கும் இங்கும் சுற்று திரிந்த காட்டெருமை தனியார் தோட்டத்திற்குள் சென்றது. தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டெருமை நகர் பகுதிக்குள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |