வனவிலங்குகளுக்கு இடையூறாக அளிக்கக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசனகுடி நோக்கி செல்லும் சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு வனவிலங்குகளை புகைப்படம் எடுக்கின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது வாகனங்களை நிறுத்தினால் காட்டு யானைகள் கோபத்தில் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை பின்பற்றி கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.