வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்து சென்று பணம் பறித்த பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனியில் இருக்கும் விடுதியில் கடந்த 2 வருடமாக 27 வயதுடைய வாலிபர் தங்கியுள்ளார். இந்த வாலிபர் சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சமையல் வேலையை முடித்துவிட்டு வாலிபர் வடபழனி செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது 35 மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆபாச சைகை காட்டியும், ஆசை வார்த்தைகள் கூறியும் வாலிபரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய வாலிபர் அந்த பெண்ணோடு தாம்பரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 3 பெண்களும், வாலிபரை அழைத்து சென்ற பெண்ணும் அவரை வீட்டுக்குள் அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்து ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு பெண்கள் அந்த வாலிபரை விரட்டி அடித்தனர். இதுகுறித்து அந்த வாலிபர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை அழைத்து சென்று பணத்தை பறித்த 4 பெண்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.