Categories
மாநில செய்திகள்

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த குழந்தையின் அழுகை….. பச்சிளம் பிள்ளைக்கு சித்திரவதை….!!!

உல்லாசத்திற்கு குழந்தையின் அழுகை சத்தம் தடையாக இருந்த காரணத்தினால் தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை சித்திரவதை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தையை வார்டில் குழந்தையுடன் தாயை ஒருவர் அவ்வபோது சித்திரவதை செய்து வருவதாக புகார் வந்தது. இதையடுத்து சைல்டு லைன் அதிகாரிகள் அந்த மருத்துவமனைக்கு விரைந்து விசாரணை நடத்தியதில் அந்த குழந்தையின் பாட்டி பல்வேறு தகவல்களை வெளியிட்டார் . நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணாம்பாளின் குடும்பம் சில ஆண்டுகளுக்கு முன்பாக நாகர்கோவிலுக்கு குடிபெயர்ந்தது .கிருஷ்ணம்மாள் வீடு வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மகன் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக பணியாற்றினார் .

மாரிமுத்து முகிலா என்ற பெண்ணை திருமணம் செய்து அவருக்கு இரண்டரை வயது ஆண் குழந்தை உள்ளது. ஏழு மாதங்களுக்கு முன்பு இவர்கள் சிறுமி தொடர்பான சம்பவத்தில் போஸ்கோ சட்டத்தின்கீழ் கணவன் மனைவி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு முகிலா விடுதலையாகி வந்த நிலையில் மாரிமுத்து சிறையில் உள்ளார். முகிலா நீதிமன்றத்துக்கு தனது வழக்கு தொடர்பாக சென்று வந்தபோது அப்பகுதியை சேர்ந்த சுயம்பு லிங்கம் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் முகிலாவின் குழந்தைக்கு காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு வந்த சுயம்புலிங்கம் அடிக்கடி அந்த சுயம்பு லிங்கத்துடன் தனியாக சந்தித்து பேசி வந்ததாகவும், அவர்கள் உல்லாசமாக இருப்பதற்கு குழந்தை மிகவும் இடையூறாக இருந்ததால் அந்த குழந்தையை தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து சித்திரவதை செய்ததாக அந்த வார்டில் இருந்தவர்கள் புகார் தெரிவித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பச்சிளம் குழந்தையை தாயாரும் மற்றொரு நபரும் சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |