Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உல்லாசமாக இருக்க விரும்புகிறீர்களா…? போலீசாரிடம் சிக்கிய கிளப் மேலாளர்…. ஈரோட்டில் பரபரப்பு…!!

மசாஜ் கிளப்பில் விபசாரம் நடத்திய குற்றத்திற்காக மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர். 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே இருக்கும் ஒரு லாட்ஜ் .  ஒருவர்  மசாஜ் கிளப் நடத்தி வருகிறார். இந்த மசாஜ் கிளப்பில் விபசாரம் நடைபெறுவதாக  பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு  கவுதம் கோயலுக்கு புகார் வந்துள்ளது. அந்த  புகாரின்  அடிப்படையில் போலீசார் ஒருவர் சாதாரண உடையில் மசாஜ் கிளப்பிற்கு சென்றுள்ளார்.

அங்கு கிளப் மேலாளர் தானேஷ்குமார் என்பவர் மசாஜ் செய்வதற்கு 2 ஆயிரம் ரூபாய்  தர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் நீங்கள் உல்லாசமாக இருக்க விரும்பினால் அதற்கு தனியாக இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும் கூறியுள்ளார். இதனையடுத்து மேலாளர்  கிளப்பில்  இருந்து 3 பெண்களை வரவழைத்து போலீஸ்கரரிடம் காண்பித்துள்ளார். அதன் பின்  போலீசார் தன்னிடம் இரண்டாயிரம் ரூபாய் தான் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் வெளியே சென்று பணத்தை எடுத்து தருகிறேன் எனக் கூறிவிட்டு காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெருந்துறை காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மசாஜ் கிளப்பிற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிளப்பில் 3 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது உறுதியானது. இதனையடுத்து மசாஜ் கிளப் தானேஷ்குமாரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். மேலும் அந்த மூன்று பெண்களை மீட்டு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Categories

Tech |