Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உளுந்த வடையில் ரப்பர் பேண்ட்”…. அவமரியாதையாக பேசிய கடைக்காரர்… தீவிர விசாரணையில் அதிகாரிகள் …!!!!!!!

உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  நூத்துலாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளியான முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் உளுந்த வடை வாங்கியுள்ளார். இதனையடுத்து முனியாண்டி அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் “ரப்பர் பேண்ட்”இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியாண்டி டீ கடைக்காரரிடம் கேட்டபோது அவர் முனியாண்டியை அவமரியாதையாக   பேசி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த  முனியாண்டி பேரூராட்சி அலுவலக அதிகாரியிடம் உளுந்து வடையில் ரப்பர் பேண்ட் இருப்பதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் டீ  கடைக்காரரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |