Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

இந்தியாவின் தடுப்பு மருந்து…. கவுதமாலா நாட்டிற்கு 2 லட்சம்…. நன்றி கூறிய அதிபர்…!!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனாவிற்கான 2 லட்சம் தடுப்பு மருந்து கவுதமாலா நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸை தடுப்பதற்காக தடுப்பு மருந்துகள் போடப்பட்டு வருகின்றன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பு மருந்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வரையில் மொத்தமாக 1,42,42,547 தடுப்பு மருந்துகள் போடப்பட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் கோவிஷில்டு ஆகிய தடுப்பு மருந்துகள் இலங்கை, மாலத்தீவு, நேபாளம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது கவுதமாலா நாட்டுக்கும் 2 லட்சம் தடுப்பூசிகள் இந்தியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைப் பெற்றுக் கொண்ட பின் கவுதமாலா நாட்டின் அதிபர் அலிஜான்டிரோ கியாம்மடெய் கொரோனா தடுப்பு மருந்து கொடுத்து உதவி புரிந்ததற்கு இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் இருவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என்று கூறினார். தடுப்பு மருந்துகளை எங்களுக்கு விற்காமல் நன்கொடையாக வழங்கியுள்ளது எங்களுக்கு பெருமையாக உள்ளது. இதனால் முன் களப்பணியாளர்கள் பயன் அடைவார்கள் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |