Categories
தேசிய செய்திகள்

உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை…. 2023 மார்ச் வரை…. அதிரடி அறிவிப்பு…..!!!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 2022- 23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்த நிலையில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் ஆகும்.

Categories

Tech |