உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை முழுவதுமாக மத்திய அரசு தற்போது நீக்கியுள்ளது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் அனைத்து உள்நாட்டு விமான சேவைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடு காரணமாக 85% பயணிகளுடன் மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டில் தற்போது கொரோனா குறைந்து வருவதைத் தொடர்ந்து உள்நாட்டு விமான சேவைகளில் விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி வரும் 18-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை எந்தவித கட்டுப்பாடும் இன்றி முழுமையாக 100 சதவீத இருக்கை வசதியுடன் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது