தமிழக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமது உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “அகிலம் முழுவதும் மனித நேயம் செழித்து வளர, தன் உயிரையே இவ்வுலகிற்கு அர்ப்பணித்த தேவகுமாரனாம் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெரிய விழாவாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.