துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியா வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பயணிகளிடம் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 2 பேரிடம் இருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணி 850.80 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகலுக்குள் தங்க பேஸ்ட்களை மறைத்து கடத்தி வந்து அவர்களிடம் சுங்க இலாகாவில் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்