Categories
உலக செய்திகள்

உள்ளாடையுடன் உணவகத்திற்கு வந்த பெண்….. வெளியேற்றிய ஹோட்டல் நிர்வாகம்….. பின்னர் நடந்தது …!!

பெண் ஒருவர் உள்ளாடை அணிந்து உணவகத்திற்கு வந்ததால் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஆஸ்திரேலியாவில் உள்ள North bondi என்ற பகுதியில் உள்ள உணவகம் north bondi fish. இந்த உணவகத்தில் சுற்றுலா பயணியான Martina corradi என்ற பெண் தன் காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அந்த உணவகத்தை விட்டு பலர் முன்னிலையில் தான் வெளியேற்றப்பட்டுள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அந்த உணவகத்தின் மேலாளர், Martina corradi யிடம் மன்னிப்பு கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு உணவு இலவசமாக வழங்கவும் முடிவு எடுத்துள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் Martina corradi மற்றும் அவருடன் வந்த நபர் ஆகிய இருவரையும் உணவகத்தை விட்டு வெளியேற்றியது எங்களது தவறுதான். அதனை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும் நாங்கள் தனிப்பட்ட முறையில் அவரிடம் தொடர்புகொண்டு நாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளோம். மேலும் அவரையும் அவருடன் வந்த நபரையும் மதிய உணவிற்கு வருமாறு அழைத்துள்ளோம். மேலும் பெண்கள் சாதாரண ஆடை அணிவதை ஆதரித்து உள்ளோம்.

எனினும் அவரை வெளியேறச் செய்திருக்க கூடாது. இதனால் எங்கள் நிர்வாகத்தின் ஊழியர்களிடம் ஆடைக்குரிய அவசியத்திற்கு மீண்டும் பயிற்சி அளிக்க உள்ளோம். மேலும் எங்கள் உணவகத்திற்கு வருகை தரும் அனைத்து மக்களையும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும்  இத்தாலியைச் சேர்ந்த இந்த பெண் உள்ளாடை அணிந்து வந்துள்ளார். அதனை அவர் புகைப்படத்துடன் முகநூலில் வெளியிட்டு நான் இந்த ஆடையுடன் சென்றதால் தான் உணவகத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் அதனால் மிகவும் வருத்தம் அடைந்தேன் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |