தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஹலோ எஃப்எமில் ஒளிபரப்பான ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பொழுது, “ஜனநாயகத்தில் ஆணிவேர், ஊரக உள்ளாட்சி அமைப்புகள்தான். இத் தேர்தலில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களே வெற்றி பெற இயலும். மேலும் விரும்பிய தொகுதிகளானது உள்ளாட்சித் தேர்தல் மட்டுமல்ல வேறு எந்த தேர்தலிலும் கிடைப்பதில்லை. எனவே அனைவரும் தனித்து போட்டியிட வேண்டும்.
கூட்டணி அமைப்பது தேவையில்லாத ஒன்றாகும். திமுக அரசானது நீட் தேர்வு குறித்து சரியான திசையில் சென்று கொண்டிருப்பதால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுகவின் கோரிக்கையான, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை. கல்வியானது பொது பட்டியலில் இருந்தால் மட்டுமே மத்திய அரசின் நிதி உதவி கிட்டும்” என்று தெரிவித்துள்ளார்.