உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸின் பங்களிப்பு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார் .
உள்ளாட்சி அமைப்புகளின் மிக முக்கியமான தேர்தல் இனிமேல்தான் வர உள்ளது. எனவே இது குறித்த எதிர்பார்ப்புகள் கட்சியினர் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் முன்னோட்டமாக தற்போது கட்சிகள் ஆங்காங்கே கூட்டம் கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் திமுக ,பாமக, மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து வருகின்றன. திமுக கூட்டணியில் ஏற்கனவே வேட்பு மனுக்கள் பெறப்பட்டன.
இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருப்பதாவது,” தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவித்தவுடன் எங்களுக்கான இடங்களை நாங்கள் திமுகவிடம் கேட்டுப் பெறுவோம்.!!”இவ்வாறு அவர் கூறினார்.