சென்னையில் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்ற இடங்களில் மறுவாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று மநீம கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், தேர்தல் ஆணைய அலுவலக வாயிலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.