உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில் அந்த 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்துவதற்காக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று தற்போது தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அனுபவம் உள்ளவராக தேர்தல் அலுவலர்களை நியமிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவராக இருக்க கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.