ஊரக உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன..
இந்தநிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. குக்கர் சின்னம் வழங்க வேண்டும் எனக்கோரி டிடிவி தினகரன் மனு அளித்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் அமமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்..