உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் நாளை பரப்புரை செய்ய உள்ளதாக மநீம தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்..
ஏற்கனவே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கி விட்டார்.. இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும் என்று தெரிவித்துள்ளார்..
உள்ளாட்சித் தேர்தலுக்கான எனது பரப்புரை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ நாளை காஞ்சிபுரத்தில் ஒலிக்கும்.
— Kamal Haasan (@ikamalhaasan) September 26, 2021