சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன்பின்னர் ஸ்டாலின் செயல்பாடுகளை அதிமுக ஆதரவாளர் மட்டுமின்றி திமுகவுக்கு எதிராக இருந்தவர்களும் கூட இவருக்கு ஆதரவு கொடுக்கும் நிலை உள்ளது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த 2019ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக வானது 50 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது.
ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெற்றுள்ள இத்தேர்தலில் அதிமுகவானது 10 சதவீத வாக்குகளை கூட எட்ட போராடி வருகின்றனர். அனைத்து பிரிவுகளிலும் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதிவுகளில் பெரும்பான்மையான வாக்குகளை திமுக வேட்பாளர்களே பெற்றிருக்கின்றனர்.
இந்த ஐந்து மாதங்களில் இவ்வளவு பெரிய வெற்றி எவ்வாறு சாத்தியமானது என்பதை குறித்து மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அதில் இந்த ஐந்து மாதங்களில் திமுக ஆட்சியானது சிறப்பாக பல்வேறு நலத்திட்டங்களை குறுகிய காலத்திலேயே நடத்தி முடித்துள்ளது. இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்யும் திமுகவிற்கு மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு என்பது தெளிவாகியுள்ளது.