தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விகளை கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல தேமுதிக. தேமுதிகவின் கட்டமைப்பு வலிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories