Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் 25 கேட்கும் பாஜக…. கடும் ஷாக் ஆன அதிமுக…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக பாஜகவினர் அதிமுக கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து கூட்டணி கட்சியினருக்கு இடம் ஒதுக்கீடு செய்வது பற்றி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவுக்கான இடங்களின் பட்டியலை அக்கட்சி நிர்வாகிகள் அதிமுக தரப்பிடம் கொடுத்துள்ளனர். ஆனால் பாஜக கேட்கும் இடங்களை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 25 இடங்கள் கேட்டு பாஜக தரப்பில் கோரப்பட்டுள்ளதை கேட்டு அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட பாஜக நான்கு இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தில் தாமரையை மலர செய்தது. கூட்டணி என்ற பெயரில் அதிமுகவின் இமேஜை பயன்படுத்திக் கொண்டு தமிழகத்தில் தாமரை மலரச் செய்த பாஜக தற்போது அடுத்தகட்ட நகர்வாக உள்ளாட்சித் தேர்தலில் 25% இட ஒதுக்கீடு செய்யுமாறு கேட்கிறது. பாஜகவின் இந்த கோரிக்கைக்கு அதிமுக உடன்படுமா? அல்லது பாமக கூட்டணி வைக்குமா? என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது

Categories

Tech |