Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள்…. பலத்த பாதுகாப்பு…. போலீஸின் கொடி அணிவகுப்பு…!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர். 

 

தமிழகத்தில் வருகிற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 33 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 57 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பதற்றமான 17 வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர்  கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி  தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த காவல்துறையினர் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு விழாவில் அனைத்து காவல்துறையினரும் கலந்து கொண்டனர். இந்த கொடி  அணிவகுப்பு  எஸ்.வி.ரோடு,டேக்கிஸ்பேட்டை, சந்தைப்பேட்டை,நேதாஜி பைபாஸ் ரோடு வழியாக சென்று 4 ரோடு பகுதியில் முடிவடைந்தது.

Categories

Tech |