9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக..
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போதைய அதிமுக ஆட்சியில் மாவட்டம் பிரிக்கப்பட்டதன் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது..
தேர்தல் நடத்தபடாத 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. இதையடுத்து தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் ( tnsec.tn.nic.in ) வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு அதிமுக பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், சிற்றூராட்சி தலைவர், சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் மாவட்டங்களுக்கு நியமிக்கப்படுகிறார்கள்..
வேலூர் – கேபி முனுசாமி, அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர்.கே அப்பு, வேலழகன்
காஞ்சிபுரம் – திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா, காமராஜ், பென்ஜமின், சோமசுந்தரம்
ராணிப்பேட்டை – எஸ்.பி வேலுமணி, சு.ரவி, பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன்
திருப்பத்தூர் – செங்கோட்டையன், கேபி அன்பழகன், கருப்பணன், கே.சி வீரமணி
செங்கல்பட்டு – தங்கமணி, பா.வளர்மதி, பாண்டியராஜன், சிட்லபாக்கம் ராசேந்திரன், ஆறுமுகம், கே.பி கந்தன்
நெல்லை – தளவாய் சுந்தரம், கருப்பசாமி பாண்டியன, இசக்கி சுப்பையா ,பரமசிவன், சீனிவாசன், இன்பதுரை, கணேசராஜா
விழுப்புரம் – ஓ.எஸ்.மணியன், சி.வி சண்முகம்
தென்காசி – ஆர்.பி உதயகுமார், மனோஜ் பாண்டியன், கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி
சி.கிருஷ்ண முரளி, செல்வமோகன்தாஸ்பாண்டியன்,
கள்ளக்குறிச்சி – எம்.சி சம்பத், சி.விஜயபாஸ்கர் இரா. குமரகுரு
முன்னதாக நாளை மறுநாள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.. இந்த நிலையில் இந்த குழுவை நியமித்துள்ளது அதிமுக..
அறிக்கை இதோ :
— AIADMK – Say No To Drugs & DMK (@AIADMKOfficial) September 4, 2021