Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா வைக்கப்படும்… தமிழக அரசு உறுதி!!

உள்ளாட்சி தேர்தலில் சாத்தியமுள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் எனக் கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.. அதன் தொடர்ச்சியாக இன்று விசாரணைக்கு வந்தது. நேற்றைய தினத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து பின்னர் முடிவு அறிவிப்பதாக அரசுத் தரப்பிலிருந்து வழக்கறிஞர் பதிலளித்தார்..

இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.. இன்று விசாரணைக்கு வந்த போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சிசிடிவி கேமரா முழுவதுமாக பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்றுகூற, இதற்கு பதிலளித்த தமிழக அரசு சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தது.. இதையடுத்து சாத்தியமுள்ள வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தல் வழங்கிய நீதிமன்றம், அதிமுக தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துள்ளது.

Categories

Tech |