Categories
தேசிய செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் “தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி”… பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதி 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து 12ஆம் தேதி தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றது.. இருப்பினும் அதிமுக மற்றும் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் சில இடங்களில் வெற்றி பெற்றன.. வெற்றி பெற்ற அனைவரும் இன்று பதவியேற்றுக் கொள்கிறார்கள்..

இந்த நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்” என்று பதிவிட்டுள்ளார்..

ஒன்பது மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.. இந்த டுவிட்டுக்கு பிரதமர் மோடி பதிலளித்து தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்..

உள்ளாட்சி தேர்தலில் யூனியன் கவுன்சிலர்கள் (8), கிராம பஞ்சாயத்து தலைவர்கள் (41) மற்றும் 332 உள்ளூர் வார்டு உறுப்பினர்கள் இடங்களை பாஜக பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |