தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் உள்ளாட்சி தேர்தலில் நீலகிரி மாவட்டம் தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம் வயல் பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
இதையடுத்து நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சபீர் என்பவருக்கும், அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த பூவி என்பவரின் கணவர் நாணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரம் அடைந்த நாணி, சபீரை கத்தியால் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.