ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது..
தமிழகம் முழுவதும் உள்ள 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று தெரிவித்துள்ளது..
இதனையடுத்து தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.. பாமக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.. இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்துள்ளது..