Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்… ரூ 1,63,000 பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி…!!

குலசேகரம் அருகே இரண்டுபேரிடம் 1,63,000  பணத்தை பறக்கும் படையினர்  பறிமுதல் செய்தனர் .

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம்- திற்பரப்பு சாலையில் டான்சலின் தலைமையிலான பறக்கும் படை குழுவினர்கள் கடந்த 8ஆம் தேதி வாகன பரிசோதனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அப்போது அவ்வழியாக உரிய ஆவணங்களின்றி பைக்கில்  ரூபாய் 1,00,000 கொண்டு வந்த ராபி   என்பவரை அதிகாரிகள் சோதனை செய்துள்ளார்கள். இதனையடுத்து அதிகாரிகள் அவரிடமிருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் நேற்றுமுன்தினம் குலசேகரம்  அருகில்  உள்ள  திருநந்திக்கரை  என்ற  பகுதியில்  வசிக்கும்  விஜயகுமார் என்பவரின்  23 வயது  மகன் அஜய்  என்பவரது டெம்போவை  சோதனை செய்த போது போதிய ஆவணங்களின்றி ரூ 63,050 கொண்டு வந்ததையும் அவர்கள் கண்டறிந்தனர். அதன் பின்பு அந்த பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .

Categories

Tech |