Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. ரூ.8½ லட்சம் மதிப்புள்ள பட்டு சேலைகள் பறிமுதல்…. அதிகாரிகள் அதிரடி..!!

சங்ககிரியில் உரிய ஆவணம்  இல்லாமல்  சரக்கு  வாகனத்தில்  கொண்டு சென்ற  ரூ.8 ½ லட்சம் மதிப்புள்ள பட்டு  சேலைகளை பறக்கும் படையினர்  பறிமுதல்  செய்துள்ளனர்.

தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது பறக்கும் படையினர் ஆவணமின்றி  ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யார் கொண்டு சென்றாலும் அதனை  பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த  நிலையில்    சேலம்  மாவட்டத்தில்   உள்ள  சங்ககிரி  சுங்கச்சாவடி   அருகே    உரிய ஆவணமின்றி  சரக்கு  வாகனத்தில்  கொண்டு சென்ற ரூ.8½ லட்சம்  மதிப்புள்ள  பட்டு சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  கடந்த   14 ஆம் தேதி  இரவு  11.30  மணியளவில்  சேலத்தில்   இருந்து  சங்ககிரி  நோக்கி  வந்த  சரக்கு  வாகனம்  ஒன்றை  நிறுத்தி  சங்ககிரி  தனி தாசில்தார் சாந்தனி , போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி  சோதனை நடத்தினர்.

அப்போது அதில்   48 அட்டை பெட்டிகள்  இருந்து உள்ளது . அந்த  அட்டை பெட்டிகளில்  பார்க்கும்  போது  1,416 பட்டு சேலைகள் இருந்திருக்கிறது.  இந்த   சரக்கு  வாகனத்தை  சேலம்  அருகே  மணியனூரை  சேர்ந்த  40 வயதான  சக்திவேல் என்பவர்  ஒட்டி  வந்துள்ளார். இந்த விசாரணையில்  அவர்  சேலைகளை வாஷிங் செய்வதற்காக சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கு கொண்டு  செல்வதாக  தெரிவித்துள்ளார்..

ஆனால்   அவரிடம்   இதற்கான  உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த  பறக்கும் படை  அதிகாரிகள் அவர்  கொண்டு  வந்த ரூ.8 லட்சத்து 53 ஆயிரத்து 335 மதிப்புள்ள பட்டு சேலைகளை பறிமுதல் செய்தனர்.  இதைத்தொடர்ந்து  பறக்கும் படை அதிகாரிகள்   அந்த  சேலைகள்  அனைத்தையும்  சங்ககிரி பேரூராட்சி  தேர்தல் நடத்தும் அலுவலர் சுலைமான் சேட்டிடம்  வழங்கினர்.   அதனை  தொடர்ந்து   அவை அனைத்தும் சங்ககிரி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Categories

Tech |