Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்…..!!!!!

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க சுப்ரீம்  கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் அதனுடன் இணைந்திருந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் தயாராகி வருகிறார்கள்.இதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.இந்த பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடையும் என்றும் பின்னர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |