Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்… தேர்தல் பார்வையாளர் ஆய்வு..!!

சேலம்  மாநகராட்சியில்   வாக்குச்சாவடிகளுக்கு   அனுப்ப  இருக்கும்  பொருட்கள்  அனைத்தும்  சரியாக   இருக்கிறதா என்று  தேர்தல் பார்வையாளர்  அண்ணாதுரை  ஆய்வு  மேற்கொண்டார். 

சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள்  உறுப்பினர்  பதவிகளுக்கு தேர்தல்  நடத்துவதற்கான  பணிகள்  தீவிரமாக  நடைபெற்றுவருகின்றன.   இதற்காக  மாநகர பகுதியில் 709 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளுக்கு தேவையான 84 வகையான பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதாவது  கொரோனா நோய் தொற்று தடுப்பு  நடவடிக்கையாக  709 வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களுக்கு  தேவையான வெப்பமானி, சானிடைசர், முககவசம்,  கையுறைகள், முழு கவச உடைகள், வாக்காளர்களுக்கான கையுறைகள், பஞ்சு மற்றும் குப்பை வாளிகள் உள்பட பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு  சேலம் கோட்டை பல்நோக்கு அரங்கில்  தயார்  செய்யப்பட்டு  வருகிறது.

அந்த  இடத்திற்கு  மாவட்ட  தேர்தல் பார்வையாளர் அண்ணாதுரை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்மாநகர என்ஜினீயர் ரவி, மாநகர நல அலுவலர் யோகானந்த், உதவி ஆணையாளர் சாந்தி, உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி  ஆகியோர் நேற்று  சென்று  ஆய்வு செய்தனர். வாக்குச்சாவடி பொருள்கள் அனைத்து வாக்குச்சாவடிக்கும்  அனுப்பி  வைக்கும் போது  கொரோனா   தடுப்பு  நடவடிக்கைக்கு  உரிய  பொருள்களையும்   அனுப்ப  வேண்டும்   என்றும்  இந்த பணிகள் அனைத்தும்  மேற்கொள்ள ஒவ்வொரு  வாக்குச்சாவடிக்கும்  தனித்தனியாக    பணியாளர்கள்  நியமிக்கப்பட  வேண்டும்  என்று   தேர்தல்  பார்வையாளர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

இதனை   அடுத்து  வாக்குச்சாவடிகளுக்கு  தேவையான அனைத்து  பொருட்களும்  குறிப்பிட்ட காலத்திற்குள்   வாக்குச்சாவடிகளுக்கு அனுப்ப  வேண்டும்  என்றும், எந்த  ஒரு பொருட்களையும்  தவறாமல் சரி பார்த்து அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அனைத்து பொருட்களும் வரிசைப்படி சரியாக உள்ளதா? என அவர் ஆய்வு செய்தார்.

 

 

.

Categories

Tech |