Categories
மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. வாக்குப்பதிவு குறைய காரணம் இதுதான்?…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதமானது 60.70% என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் மிகவும் குறைந்தளவு வாக்கு சதவீதம் சென்னையில் தான் பதிவானது. சென்னையில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகள் உள்ளது.

இதுவரை சென்னையில் 50 சதவீதத்திற்கு குறைவாக வாக்குப்பதிவு நடந்ததில்லை. கடந்த 2011-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 52.67 சதவீதமும், அதே வருடம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 52.67 சதவீதமும், 2021-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 59.06 சதவீத வாக்குகள் பதிவானது. ஆனால் நேற்று முன்தினம் நடந்த நகர்ப்புறஉள்ளாட்சித் தேர்தலில் 43.59 சதவீதம் தான் பதிவானது.

இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது, இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்தது. படித்தவர்கள் தவறாமல் வந்து வாக்களிக்க வேண்டும். நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கு வெறுப்பு காரணமல்ல. பெரும்பாலானோர் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |