Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“உள்ளூர்காரர்களுக்கு குலோப் ஜாமுன் விலை இவ்வளவா? குறையுங்கள் என்று சொல்லி”…. கடையின் உரிமையாளரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவர் கைது…!!!

குலோப் ஜாமுன் விலையை குறைக்கச் சொல்லி கடையின் உரிமையாளரை தாக்கிய சட்டக் கல்லூரி மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையை அடுத்துள்ள மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஸ்வீட் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரண்டு பேர் வந்து உள்ளார்கள். அவர்கள் குலோப்ஜாமுன் விலையை கேட்டார்கள். அதற்கு கடையின் உரிமையாளர் லோகேஷ்கான் ரூ 100 என்று தெரிவித்தார். உடனே அந்த இரண்டு பேரும் உள்ளூர்க்காரர்கள் எங்களுக்கு ரூ 100 என்று கூறுகிறீர்களே? குலோப்ஜாம் விலையை குறைத்து கொடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதற்கு லோகேஷ்கான் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த 2 பேரும் லோகேஷ்கானை கடைக்குள் தள்ளி இருவரும் உள்ளே நுழைந்து அவரது கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.

உடனே லோகேஷ்கான் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஸ்வீட் கடைக்காரரை தாக்கிய மடிப்பாக்கம் பகுதியில் வசித்த 28 வயதுடைய பாலாஜி என்பவரை கைது செய்துள்ளனர். இவர் ஆந்திராவில் இருக்கின்ற சட்டக்கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கின்ற மதன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |