தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினை ஒன்றை திமுக MP. திருச்சி சிவா எழுப்பினார். மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியான மத்திய அரசு துறை பணியிடங்களில் மிகச் சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பபட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90% இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கே மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் 84 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளதாக திருச்சி சிவா கூறினார்.
UPSC நடத்தும் தேர்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போது தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணி இடங்களை நிரப்ப SSC மூலம் நடத்தப்பட்ட அகில இந்திய தேர்வுகளில் தமிழக இளைஞர்களுக்கு சொற்ப இடங்கள் மட்டுமே கிடைத்ததாக திருச்சி சிவா கூறினார். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அகில இந்திய அளவில் தேர்வுகள் நடைபெறுவதால் வடமாநில இளைஞர்களை பெரும்பாலும் தேர்ச்சி பெறுகின்றனர்.