Categories
மாநில செய்திகள்

உள்ளூர் விடுமுறை…. அனைத்து பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவின் முக்கிய அம்சமாக வருகின்ற ஜூலை 11ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். அதனால் ஆணி தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வருகின்ற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அடித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய நாளில் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதாவது இருந்தால் பொது தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் பொது தேர்வு நடைபெறும் பள்ளிகள் மட்டும் தேர்வு தொடர்பான பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் இந்த நாளில் நடத்தப்படும் அரசு பொதுத்தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலும் இல்லாமல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |