Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

உள்ளே எல்லாரும் வராதீங்க…! சுடுகாட்டில் திடீர் சண்டை… மயான ஊழியர் மீது தாக்குதல்… புதுவையில் பரபரப்பு …!!

புதுச்சேரி கருவடிக்குப்பம் மயானத்தில் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்ய வந்தவர்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிபத்தில் உள்ள மின் மையானம் மற்றும் சுடுகாட்டில் எரியூட்டபடுகிறது. உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் இரவு பகல் பாராமல் ஓய்வின்றி சடலங்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை தகனம் செய்ய கருவடிக்குப்பம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது இறுதிச்சடங்கு செய்ய தனியார் பள்ளி நிர்வாகிகள் ஊழியர்கள் மாணவர்கள் என திரளானோர் குவிந்தனர்.

சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே பயணத்திற்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து திடீரென மயானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |