தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருகும் வெல்லம், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும் இந்த கோபாலபுர அரசு பொங்கல் பரிசினை வெளியே விளம்பரத்திற்காக வழங்கியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே உருகிய வெல்லம், புளியில் பல்லி என பொங்கல் பரிசு தொகுப்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பில் மிளகுக்கு பதிலாக பருத்திக் கொட்டையும், வெண்டைக்காய் விதையும், அவரை கொட்டையும் மிளகு போலவே செய்து கொடுத்துள்ளனராம்.
அதேபோல் தனியாத்தூள், மிளகாய்த்தூள் பாக்கெட்டுகளில் மரத்தூளை கலப்படம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஆட்சியை போலவே உள்ளே கலப்படம் வெளியே விளம்பரம் என்று பொங்கல் பரிசினை வழங்கியுள்ளதாக கூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.