இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீனாவுக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய விண்வெளி ஆய்வுக் கப்பலான யுவான் வாங்-5 ஆகஸ்ட் 16ஆம் தேதி, இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. யுவான் வாங் – 5 கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. எதிர்ப்பை மீறியும் சீனாவின் உழவு கப்பல் இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் மிகவும் தாழ்வாகப் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டது. அத்துடன் இந்திய கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் கடலில் இறங்கி பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.