Categories
மாநில செய்திகள்

உள்ளே வராதீங்க…. திருப்பி அனுப்பப்பட்ட ஆசிரியர்கள்…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இதற்கிடையில் பள்ளி திறப்பதற்கு முன்னதாக அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்குள் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் கொரோனா அதிகமாக பரவி வரும் சூழலில், அங்கிருந்து தமிழக எல்லைக்குள் வரும் பயணிகள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் பள்ளிகள் திறக்கப்பட்டதால், தமிழக எல்லையோர மாவட்ட பள்ளிகளுக்கு கேரளாவிலிருந்து வரும் ஆசிரியர்கள் பலர் எந்தவித பரிசோதனை சான்றிதழும் இல்லாமல் வந்ததுள்ளனர்.

இதனால் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாமல், சான்றிதழ் இருந்தால் மட்டுமே வர வேண்டும் என்று கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதனையடுத்து கேரளாவிலிருந்து தமிழக எல்லைக்குள் வரும் ஆசிரியர்கள், ஓட்டுநர்கள் பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Categories

Tech |