சீன நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் திபெத் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஆன்மீக தலைவரான தலாய்லாமா என்பவர் வசித்து வருகிறார். இவரை சீனா பிரிவினைவாதி என்று குற்றம் சுமத்தியுள்ளதோடு, அவரை ஆதரிப்பவர்களையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆன்மீக தலைவர் தலாய்லாமா தன்னுடைய 87-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார். இதன் காரணமாக பிரதமர் மோடியை சீனா விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் ஆன்மீக தலைவர் தலாய்லாமா சீனாவுக்கு எதிரான பிரிவினை வாதத்தை கொண்டுள்ளார். இதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு சீனாவுக்கு அளித்த உறுதி மொழியை இந்தியா கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும். மேலும் சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும், தீபத் சார்ந்த விவகாரங்களை பயன்படுத்தக்கூடாது எனவும் கூறியுள்ளார்.