இப்போது அனைத்து விவசாயிகளிடமும் கைபேசி இருப்பதால் வேளாண்மை குறித்த பல்வேறு தகவல்களை கைபேசி வாயிலாக வழங்கும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது தான் உழவன் செயலி ஆகும். தற்போது உழவன் செயலி வாயிலாக வழங்கப்படும் சேவைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
மானியத் திட்டங்கள்:
வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் வாயிலாக செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்கள்.
இடுபொருள் முன்பதிவு
வேளாண்மை, உழவர் நலத்துறை வாயிலாக விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.
பயிர்காப்பீடு விவரம்
அறிவிக்கப்பட்ட(Notified) கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள், அணுகவேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க் காப்பீட்டின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள்.
உரங்கள் இருப்புநிலை
தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களிலுள்ள ரசாயன உரங்களின் இருப்பு, விலை குறித்த விபரங்கள்.
விதை இருப்பு நிலை
வேளாண்மை, தோட்டக் கலை துறைகளில் உங்களது அருகிலுள்ள கிடங்கில் தினசரி விதைஇருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு.
வானிலை அறிவுரைகள்
மாவட்ட வாரியாக தினமும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்பு கொடுப்படும்.
கருத்துக்கள்
திட்டங்கள் குறித்த விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
இயற்கை பண்ணை பொருட்கள்
அங்ககமுறையில் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சான்றளிப்பு முகமைகள் குறித்த விவரங்கள்.