Categories
தேசிய செய்திகள்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 10 ஆயிரம் அமைக்க இலக்கு…. கைலாஷ் சவுத்ரி பேச்சு…..!!!!

ராஜஸ்தான் மாநிலமான ஜெய்ப்பூரில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் குறித்து மண்டல மாநாடு நேற்று நடந்தது. அப்போது மத்திய வேளாண்மைத்துறை ராஜாங்க மந்திரி கைலாஷ் சவுத்ரி கலந்துகொண்டு பேசியதாவது “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சுவாமிநாதன் ஆணையத்தின் அனைத்து பரிந்துரைகளையும் நிறைவேற்றி இருக்கிறது. விவசாயிகளுக்கு போதிய நிதிஆதரவு கிடைக்க வேண்டும், விவசாயச் செலவு குறைக்கப்பட வேண்டும், அத்துடன் விவசாயிகளுக்கு தரமான விதைகளும், நல்ல சந்தை விலையும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும்.

சென்ற 2013ஆம் வருடத்தில் விவசாயத்துக்கான மத்திய பட்ஜெட் ஒதுக்கீடு 23 ஆயிரம் கோடியாக இருந்த சூழ்நிலையில், இப்போது அது ரூபாய் 1.32 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளுக்கான வருவாயை 2 மடங்காக அதிகரிப்பதிலும், அவர்கள் பற்றிய அரசின் இலக்கை நிறைவேற்றுவதிலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவே நாடு முழுதும் 10 ஆயிரம் உழவர்உற்பத்தியாளர் நிறுவனங்களை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ரூபாய் 1 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Categories

Tech |