Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்த பெண் – எம்.ஏ.,எம்.பில். படித்த பெண் விவசாயி

நம்மாழ்வார் கூற்றுப்படி விவசாயம் செய்து வரும் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி பெண் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்

சிவகங்கை அருகே பனையூரில் நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட  பெண் விவசாயி ஜெயலக்ஷ்மி உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறர். வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கி உள்ளார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு விவசாயம் பார்த்து வரும் பெண் விவசாயி ஜெயலட்சுமி. 2 ஏக்கர் 60 செண்டில் கொய்யா, நாவல், வாழை பூந்திக்கொட்டை , நெல், கடலை, சம்பங்கி, எள் ஆகியவற்றைப் பயிரிட்டு உள்ளார்.

நெல் அறுவடை  முடிந்ததும் 30 செண்டில் உள்ள இடத்தில் கையால் மேடு பகுதிகளை சரிசெய்து விட்டு சம்பங்கி நடவு செய்துள்ள கலை, கரும்புகழிவு, இளநீர்க்கூடு தேவையில்லாத குச்சிகளைப் பயன்படுத்தி ஈரம் தக்க வைக்கப்படுகிறது. மாதம் ஒருமுறை தொழுஉரமும் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை அமிர்தக்கரைசலும் தெளிக்கும் இவர் பூச்சி பாதிப்பு இருந்தால் மூலிகை பூச்சி விரட்டியை பயன்படுத்துகிறார்.இது குறித்து கூறிய விவசாயி ஜெயலக்ஷ்மி நம்மாழ்வார் கூறியபடி நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்து வருவதாகவும் இது மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |