2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று(மார்ச் 19) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு வருகின்றன.
உழவுத்தொழில் உன்னதம் நிறைந்தது என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனவேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில் என்பது அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.