மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பத்துவேலி கிராமத்தின் விவசாயியான அழகையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது விவசாய நிலத்தில் உழவு பணியை முடித்துவிட்டு மதகரம் பகுதி சாலையில் உழவு இயந்திரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அழகையனின் உழவு இயந்திரத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அழகையன் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களும் காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அழகையன் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அழகையன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.