Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உழவு பணியின் போது அருகே இருந்த சிறுமி … தந்தை கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!!!

தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  வேலந்தாங்கலில் அருகே மதுரா நார்சம்பட்டு கிராமத்தில் அருள் என்கிற அந்தோணி ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  ஐஸ்வர்யா (3) என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம்  அருள் தன்னுடைய உறவினர் டிராக்டரில் ஐஸ்வர்யாவை (3)  அமர வைத்து கொண்டு நெல் நடவு பணிக்காக நிலத்தை  உழது கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராதவிதமாக  ஐஸ்வர்யா திடீரென டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து டிராக்டரில் உள்ள இரும்பு சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளார்.

இதனால் துடிதுடித்துப் போன அருள் தன்னுடைய மகளை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் மருத்துவமனைக்கு  செல்லும் வழியிலேயே குழந்தை ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தையின் கண் முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |