Categories
அரசியல்

“உழைக்கும் நேரமிது” ராணுவ கட்டுப்பாடு வேண்டும்….. EPS…OPS அறிக்கை….!!

முதல்வர் EPS  துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பின் தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடப் போவது யார் என்ற பேச்சு விவாதப்பொருளாக தமிழகத்தில் மாறியுள்ளது. இதற்கு செல்லூர் ராஜூ உள்ளிட்ட அமைச்சர்கள் அடுத்தடுத்து, அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அவசரம் காட்டியது தான்.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் EPS துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், கட்சி நிர்வாகிகளின் கருத்துக்கள் விவாதப் பொருளாகி விட்டன. நம் அம்மா ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போல ராணுவத் கட்டுப்பாட்டுடன் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் மீண்டும் ஒரு வெற்றியை பெற முடியும். எனவே தொடர் வெற்றியைப் பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கும் நேரம் இது என்று தெரிவித்துள்ளனர். 

Categories

Tech |