மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஆண்கள் யாராவது தவறான கண்ணோட்டத்தில் பெண்கள் மீது உரசினால் பேருந்தில் உள்ள அவசர பொத்தானை அழுத்தி புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருதி சென்னையில் இயங்கும் சுமார் 1200 மாநகர பேருந்துகளில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் போது ஆண்கள் தங்களை உரசினால் அல்லது பாலியல் தொல்லை கொடுத்தால் இந்த அவசர பொத்தானை பெண்கள் அழுத்தலாம். அதன் மூலமாக சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.